விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நன்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ‘SARTHI’ என்ற இணைய தளத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) உள்ளிட்ட அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டங்களையும், அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட திட்டங்களையும் வழங்குகிறது.
‘SARTHI’ என்பது வேளாண்மை, கிராமப்புறப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காப்பீடு ஆகியவற்றிற்கான சோதனை தளம் என்பதைக் குறிக்கிறது.
காப்பீட்டுத் திட்டம் சார்ந்தத் தயாரிப்புகளைக் கண்டறிவதற்கும், வாங்குவதற்கும், பெறுவதற்குமான ஒற்றைச் சாளரத் தளமாக இந்த இணைய தளம் விளங்கும்.
PMFBY திட்டத்தின் கீழான குறை தீர்ப்பு நெறிமுறையை வலுப்படுத்தும் வகையில், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக 14447 என்ற உதவி எண்ணையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.