ஒலியியல் பண்பு மற்றும் மதிப்பீட்டிற்கான அதிநவீன நீர்மூழ்கி தளம் (SPACE) ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
SPACE தளமானது, முதன்மையாக உணர்வுக் கருவிகள் மற்றும் ஆற்றல் மாற்றிகள் போன்ற அறிவியல் கட்டமைப்புகளை விரைவாகப் பயன்படுத்தவும் அதனை எளிதாக மீட்டெடுக்கவும் அனுமதிக்கின்ற சோனார் அமைப்புகளை முழுமையாக மதிப்பிடச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும்.
நவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி காற்று, மேற்பரப்பு, நடுக்கடல் பகுதி மற்றும் நீர்த்தேக்க நிலப்பரப்பு ஆகியவற்றின் அளவுருக்கள் பற்றிய ஆய்வு, மாதிரி மற்றும் தரவுச் சேகரிப்பு ஆகியவற்றிற்கு இந்தத் தளம் பொருத்தமானதாக இருக்கும்.
இது இரண்டு தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்:
நீர் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு தளம், மற்றும்
இழுவையேற்றி (வின்ச்) அமைப்புகளைப் பயன்படுத்தி 100 மீ வரையிலான எந்த ஆழத்திற்கும் இறக்கக் கூடிய வகையிலான நீர்மூழ்கித் தளம்.