"The Elephant Whisperers" என்ற தமிழ் ஆவணப்படம் ஆனது, 95வது அகாடமி விருது வழங்கீட்டு விழாவின் ஆவணப்படக் குறும்படப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பு என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது.
அகாடமி (ஆஸ்கார்) விருது பெற்ற இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.
இந்தப் பாராட்டின் ஒரு அடையாளமாக, ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினருக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், தமிழகத்தின் முதுமலை மற்றும் ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள 91 யானைப் பாகர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்குத் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.