ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பொது சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரத் தயாரிப்புகளின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமானது இந்திய மருந்தியல் நூலை (Indian Pharmacopoeia - IP) முதல் முறையாக அங்கீகரித்துள்ளது.
IP என்பது அடையாளம், தூய்மை மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான தரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புத்தகமாகும்.
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் நாடானது IPயை அங்கீகரித்த முதல் நாடாக உருவெடுத்துள்ளது.
இதனை மத்திய வணிகத் துறை மற்றும் மத்திய சுகாதார & குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் சார்பாக இந்திய மருந்தக ஆணையமானது வெளியிடுகின்றது.
1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டம் மற்றும் 1945 ஆம் ஆண்டு விதிகள் ஆகியவற்றின் கீழ் இந்தப் புத்தகத்தின் தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.