“ஒரு மாவட்டம், ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் மஞ்சள்
August 25 , 2020 1611 days 880 0
ஈரோடு மஞ்சளானது மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமான “ஒரு மாவட்டம், ஒரு பொருள்” என்ற அணுகுமுறையின் (ODOP - one district one product) கீழ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
அதே போல நீலகிரி மாவட்டத்திற்காக வேண்டி கேரட் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகமானது பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களை முறைப்படுத்துதல் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப் படுகின்றது.
ODOP ஆனது ஒரு மாவட்டத்தில் இருக்கும் நுண் உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக நிதி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு வேண்டிய ஆதரவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசானது 60% நிதியையும் மாநில அரசானது 40% நிதியையும் அளிக்கின்றது.