தமிழ்நாடு மாநில காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக “காவலன் – SOS” என்ற ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது.
உடல் ரீதியாக துன்புறுத்துதல், பெண்களைக் கேலி செய்தல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் போன்ற அவசரகாலச் சூழ்நிலைகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தமிழக மக்கள் உடனடியாக காவல் துறையின் உதவியை நாட முடியும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடிய அல்லது அச்சுறுத்தலை உணரும் போதெல்லாம் காவலன் - SOS என்ற செயலியைப் பயன்படுத்தலாம்.