சர்வதேச வானியல் ஒன்றியமானது (International Astronomical Union - IAU) செக்ஸ்டன்ஸ் விண்மீன் தொகுப்பில் ஒரு வெள்ளை - மஞ்சள் நட்சத்திரத்தை “பீபா” என்றும் அதன் கிரகத்தை “சாந்தமாசா” என்றும் பெயரிட்டுள்ளது.
பை - மீசோன் என்ற ஒரு அணுவகத் துகளைக் கண்டுபிடித்த முன்னோடியான இந்தியப் பெண் விஞ்ஞானி பிபா சவுத்ரியின் நினைவாக இந்த நட்சத்திரமானது பெயரிடப் பட்டுள்ளது.
பீபா ஒரு பழமையான நட்சத்திரமாகும். இது 6.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இதன் ஒரே கிரகம் சாந்தமாசா ஆகும்.
இந்தக் கிரகத்தின் நிறையானது வியாழனை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது மிகவும் வெப்பமான கிரகமாக இருக்கின்றது.
சாந்தமாசா தனது நட்சத்திரத்தைச் சுற்றி சுமார் 2.1375 நாட்களில் தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இயற்பியல் துறையில் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசானது ஒரு வெளிக்கோள் கண்டுபிடிப்பிற்காக வழங்கப் பட்டுள்ளது.
IAU பற்றி
இது பிரான்சில் உள்ள பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு 1919 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டுள்ளது.
இது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகத்தின் அம்சங்களைப் பெயரிடுவதற்காக அமைக்கப் பட்ட ஒரு உலகளாவிய ஆணையமாகும்.