TNPSC Thervupettagam

“மனிதநேயத்திற்காக இந்தியா” முன்னெடுப்பு – ஜெய்ப்பூர் காலனி

December 1 , 2019 1702 days 624 0
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு சமீபத்தில் அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது “மனிதநேயத்திற்காக இந்தியா” என்ற முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது.
  • இதன் கீழ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நாடுகளில் செயற்கை மூட்டுப் பொருத்துதல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
  • இந்த முன்முயற்சிக்காக, ஜெய்ப்பூர் காலணியின் பெற்றோர் அமைப்பான புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி (BMVSS) உடன் MEA ஒத்துழைத்துள்ளது.

BMVSS பற்றி

  • இது 1975 ஆம் ஆண்டில் தேவேந்திர ராஜ் மேத்தாவால் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
  • இந்நிறுவனத்தின் வர்த்தக முத்திரை உறுப்புகளில் ‘ஜெய்ப்பூர் காலணியானது’ பிரபலமாக அறியப்படுகின்றது.
  • செயற்கை மூட்டு, இடுக்கிகள் மற்றும் பிற உபகரணங்களை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குப்  பொருத்துகின்ற உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்