TNPSC Thervupettagam

“மியாவாக்கி” தோட்ட வளர்ப்பு முறை

December 8 , 2023 357 days 213 0
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி தளங்கள் லிமிடெட் (SECL) அதன் செயல்பாட்டுப் பகுதிகளில் முதன்முறையாக மியாவாக்கி முறையைச் செயல்படுத்த உள்ளது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமான சத்தீஸ்கரின் கெவ்ரா சுரங்கத்தைச் சுற்றிலும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • கெவ்ரா மாபெரும் நிலக்கரி உற்பத்தி திட்டம் ஆனது, சமீபத்தில் 50 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை எட்டிய நாட்டின் முதல் சுரங்கம் ஆக மாறியது.
  • மியாவாக்கி என்பது காடு வளர்ப்புத் திட்டத்திற்காக நகர்ப்புறங்களில் ஒரு சிறிய காடுகளை உருவாக்கும் ஒரு முன்னெடுப்பு ஆகும்.
  • ஜப்பானியத் தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் நினைவாக இந்த முறைக்கு இப்பெயரிடப்பட்டது.
  • இந்த முறையில் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் 2 முதல் 4 என்ற அளவில் வெவ்வேறு வகையான உள்நாட்டு மரங்கள் நடப்படும்.
  • இந்த முறையில், மரங்கள் சுயச் சார்புடையதாக உள்ளன என்பதோடு வழக்கமான உரம் மற்றும் நீர்ப்பாசனம் இதற்கு தேவையில்லை.
  • அவை 3 ஆண்டுகளில் அதன் முழு உயரம் வரை வளரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்