2021 ஆம் ஆண்டு டொரோண்டோ சர்வதேச மகளிர் திரைப்பட விருது விழாவில் ஆவணப்படப் பிரிவில் (சிறந்த சுயசரிதை) “Decoding Shankar” எனும் ஆவணப் படத்திற்கு சிறந்த திரைப்படம் எனும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இது தீப்தி பிள்ளை சிவன் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு படைப்பாகும்.
இது பிரபல இசைக்கலைஞர் சங்கர் மகாதேவனுடைய வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்வு முறை பற்றி கூறும் ஒரு படமாகும்.