இந்தத் திட்டமானது (EOHO – Eat Out to Help Out) ஐக்கிய இராஜ்ஜியத்தில் கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமான பொது முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருக்கும் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தமான வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி அந்நாட்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பொருளாதார மீட்டெடுப்புத் திட்டமாகும்.
இந்தத் திட்டமானது கோடைக்காலப் பொருளாதாரப் பணிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
EOHO திட்டத்தின் கீழ், அந்நாட்டு அரசானது ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் திங்கள் முதல் புதன் வரை விடுதிகளில் உணவுகளுக்கு (உணவு மற்றும் மதுபானம் அல்லாத நீராகாரங்கள்) 50% மானியம் அளிக்க இருக்கின்றது.