TNPSC Thervupettagam

காஸ்காயிஸ் பிரகடனம்

December 5 , 2024 40 days 100 0
  • போர்ச்சுகலில் நடைபெற்ற நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டணி மீதான 10வது உலகளாவிய மன்றமானது காஸ்காயிஸ் பிரகடனத்தினை ஏற்றுள்ளது.
  • இது பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டச் செய்வதோடு, சிதைந்து வரும் நம்பிக்கை மற்றும் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு, தேசியவாதம் மற்றும் இயங்கலை வழி வெறுப்புப் பேச்சுகள் போன்ற தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது.
  • இது பல்வேறு கலாச்சார மற்றும் மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பதற்காக வேண்டி ஒரு செயற்கருவியாக செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறினை ஆதரிக்கிறது.
  • பேச்சுவார்த்தையினை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்கருவியாக "விளையாட்டுத் துறை சார் உத்தியின்" பங்களிப்பை அது குறிப்பிட்டது.
  • பேச்சுவார்த்தை மேற்கொள்ளுதல், நடுவண் நடவடிக்கை மற்றும் அமைதி உருவாக்க நடவடிக்கைகளில் பெண்களின் பங்கை ஆதரித்து நன்கு வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்