சிறிய செயற்கைக்கோள் உற்பத்தி நிறுவனமான HEX20 ஆனது, 'நிலா' எனப்படும் அதன் முதல் செயற்கைக்கோளினை விண்ணில் ஏவுவதற்காக வேண்டி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த மாநிலத்தின் முதல் புத்தொழில் நிறுவனமாக மாறி உள்ளது.
கேரளாவின் மிக நீளமான நதியின் பெயரிடப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் ஆனது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Transporter 13 விண்வெளிகலன் மூலம் விண்ணில் ஏவப் பட்டது.
HEX20 நிறுவனமானது எந்தவொருக் குறிப்பிட்ட நுட்பமும் சாராதச் செயற்கைக்கோள் தளங்களை உருவாக்குகிறது என்பதோடு மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுற்றுப் பாதையில் அதந செயல்விளக்கத்திற்கான கருவிகளின் சில நிலை நிறுத்தல் திறன்களை கொண்ட ஒரு செயற்கைக்கோள் சேவையினையும் வழங்குகிறது.