வெப்பத் தாக்க நடவடிக்கைக்கான 300 செயல் திட்டங்கள் (HAPs)
March 24 , 2025 12 days 49 0
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆனது, நகர அளவில் மேலும் 300 வெப்பத் தாக்க நடவடிக்கைக்கான சில செயல் திட்டங்களை (HAPs) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் நகர அளவில் இது போன்ற ஒரு வகையில் 200 திட்டங்கள் மேற்கொள்ளப் படுவதற்கு இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதை 500 திட்டங்களாக விரிவுபடுத்துவதற்கு NDMA இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரவுள்ளது.