TNPSC Thervupettagam

09-3X சக்திவாய்ந்த டேம்பிங் எக்ஸ்பிரஸ்

April 14 , 2018 2416 days 749 0
  • மேம்படுத்தப்பட்ட மற்றும் இயந்திரமயப்படுத்தப்பட்ட இருப்புப்பாதை நிர்வகிப்பை கொள்வதற்காக இந்திய ரயில்வே 09-3x என்ற சக்திவாய்ந்த டேம்பிங் எக்ஸ்பிரஸ் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முடுக்கி தற்போது இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
  • இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களுடன் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டன.
  • ஒருங்கிணைக்கப்பட்ட இயந்திரங்களான இவை முற்கால மற்றும் வருங்கால இருப்புப்பாதை வடிவியல் தன்மைகளை அளவிடல், தண்டவாளங்களை தேவையான கோணங்களுக்கு சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன.
  • இதுவரை மேற்கண்ட ஒவ்வொரு பணியும் வெவ்வேறு இயந்திரங்களால் மேற்கொள்ளப்பட்டன.
  • மேம்படுத்தப்பட்ட தண்டவாள நிர்வகிப்பு இயந்திரங்களை செயல்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சியை மேற்கொள்வற்காக புதிய 3D வடிவிலான (State of the art) டேம்பிங் முடுக்கி அலகாபாத்தில் உள்ள இந்திய இரயில்வே இருப்புப்பாதை இயந்திரப் பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் ஆய்வு, கண்காணித்தல், தகவல் அனுப்புதல், நிர்வகிப்பு ஆகியவற்றில் முழுவதும் இயந்திரங்களைப் பயன்படுத்தப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்