TNPSC Thervupettagam

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கிற்கான செயல்திட்டம்

April 7 , 2023 600 days 322 0
  • 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற ஒரு தொலைநோக்குக் குறிக்கோளினை நடைமுறையாக்குவதற்காக, தமிழகத்திற்காக ஒரு முழு உத்தி மற்றும் செயல்பாட்டுத்  திட்டத்தினை உருவாக்கச் செய்வதற்காக என்று, பாஸ்டன் ஆலோசனை வழங்கீட்டுக் குழுமத்தினைத் தமிழக மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது, இந்தியாவின் மாநிலங்களில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்வதோடு, அது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • இது உற்பத்தி சார்ந்தத் தொழில்துறையின் வலுவான அடித்தளம் மற்றும் மாபெரும் சேவைத் தொழில்துறை ஆகியவற்றுடன் மிகவும் வெகுவாக நகரமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்துறை மயமாக்கப்பட்ட ஒரு மாநிலமாகத் திகழ்கிறது.
  • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 9 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்களிப்பைக் கொண்டு தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாகவும் உள்ளது.
  • கணினி, மின்னணு மற்றும் ஒளியிழை சார்ந்தப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியில், இந்தியாவின் தேசிய உற்பத்தியில் 18 சதவீதப் பங்கினைக் கொண்டு தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில், 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு ஏற்றுமதியுடன் தமிழ்நாடு இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்