9 ஆண்டுகளில் தமிழகத்தின் ஏற்றுமதியினை நான்கு மடங்காக்குவதன் மூலம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுதல் என்ற ஒரு இலக்கினை அடையச் செய்வதற்காக பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு 5 ஆண்டு செயல்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
இதற்காக தமிழக அரசானது இரு முனை அணுகுமுறையைப் பின்பற்ற உள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு (மேம்பாடு) மற்றும்
ஏற்றுமதியினைப் பல்வகைப்படுத்துதல்
இது 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைவதற்கானதாகும்.
தமிழக மாநிலமானது ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அரசு தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை ஒன்றினை அமைக்கிறது.
ஒரே கட்டத்தில் மணசெல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் இரண்டு பொருளாதார வேலைவாய்ப்புப் பகுதிகளை உருவாக்கும் பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு ஏற்றுமதி செய்வதில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இத்திட்டத்தின் முழக்கம் தமிழ்நாட்டில் தயாரிக்கப் பட்டது மற்றும் ஏற்றுமதியில் ஏற்றம் என்பதாகும்.