2022-2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்தச் சரக்கு ஏற்றுமதி 447 பில்லியன் டாலர் ஆக மதிப்பிடப் பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டில் பதிவான 422 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் இதுவரை எட்டப்பட்ட அதிகபட்ச மதிப்பு இதுவாகும்.
2030 ஆம் நிதியாண்டில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குப் பொருள் ஏற்றுமதி என்ற நாட்டின் இலக்கில் 70 சதவீதத்தினை அடைய உதவும் வகையிலான மின்னணுப் பொருட்கள், பொறியியல் பயன்பாடு சார்ந்த பொருட்கள், ஜவுளி, கடல் மற்றும் வேளாண்மை, பொம்மைகள் மற்றும் மருந்துகள் ஆகிய ஆறு தொழில் துறைகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் பதிவான 451 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், இந்தத் துறைகள் 2030 ஆம் நிதியாண்டிற்குள் 670 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
2023 ஆம் நிதியாண்டில் 107 பில்லியன் டாலராக இருந்த பொறியியல் பயன்பாடு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி, 2030 ஆம் நிதியாண்டில் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தற்போது 25 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ள மருந்து ஏற்றுமதியானது 2030 ஆம் நிதி ஆண்டிற்குள் 57 பில்லியன் டாலராக உயரும்.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது, 100 பில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
ஜவுளித் துறையானது 97.7 பில்லியன் டாலர் மதிப்பினைத் தொடும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
2030 ஆம் நிதியாண்டில் கடல் சார் மற்றும் வேளாண் பொருட்களின் ஏற்றுமதி 118 பில்லியன் டாலர் மதிப்புகளை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.