உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக இந்தியாவின் பல்கலைக் கழகங்களை உருவாக்க, முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரானகோபாலசுவாமி தலைமையில் அதிகாரம் வாய்ந்த நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று பல்கலைக்கழக மானியக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளது.
20 புகழ்வாய்ந்த இந்தியப் பல்கலைக்கழகங்களை (Institutions of Eminence -IoE) பட்டியலிடுவதற்கு, பல்கலைக்கழகங்களின் விண்ணப்ப படிவங்களை மதிப்பீடு செய்ய இந்த நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு பல்கலைக் கழக மானியக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கல்வி நிறுவனங்களை மத்திய அரசு நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்க உள்ளது.
இக்குழு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்று இரண்டு அரசாங்க ஒழுங்குமுறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அவையாவன,
UGC (பல்கலைக் கழகங்களாக கருதப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்) ஒழுங்குமுறைகள் விதிகள், 2017 [UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulation, 2017]
UGC (தலை சிறந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் அரசு கல்வி நிறுவனங்கள்) ஒழுங்குமுறைகள் ,2017 [UGC (Declaration of Government Educational Institutions as Institutions of Eminence) Guidelines, 2017]
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் நிறுவனங்கள் (Institutions of Eminence -IoE)
வழக்கமான அரசு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக மாறுவதற்கு தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உடையவை.
30 சதவீதம் வெளிநாட்டு மாணவர்களை மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் உடையவை.