TNPSC Thervupettagam

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் – தமிழ்நாடு

September 28 , 2021 1061 days 5783 0
  • 9 ஆண்டுகளில் தமிழகத்தின் ஏற்றுமதியினை நான்கு மடங்காக்குவதன் மூலம் 1 டிரில்லியன்  டாலர் பொருளாதாரமாக மாறுதல் என்ற ஒரு இலக்கினை அடையச் செய்வதற்காக பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு 5 ஆண்டு செயல்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
  • இதற்காக தமிழக அரசானது இரு முனை அணுகுமுறையைப் பின்பற்ற உள்ளது.
    • ஏற்றுமதி ஊக்குவிப்பு (மேம்பாடு) மற்றும்
    • ஏற்றுமதியினைப் பல்வகைப்படுத்துதல்
  • இது 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைவதற்கானதாகும்.
  • தமிழக மாநிலமானது ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அரசு தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை ஒன்றினை அமைக்கிறது.
  • ஒரே கட்டத்தில் மணசெல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் இரண்டு பொருளாதார வேலைவாய்ப்புப் பகுதிகளை உருவாக்கும் பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது.
  • இந்தியாவில் தமிழ்நாடு ஏற்றுமதி செய்வதில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • இத்திட்டத்தின் முழக்கம் தமிழ்நாட்டில் தயாரிக்கப் பட்டது மற்றும் ஏற்றுமதியில் ஏற்றம் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்