TNPSC Thervupettagam

1 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள்

October 30 , 2019 1856 days 663 0
  • 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவிற்குச் சொந்தமான அதன் உள்நாட்டு அமைப்பான ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்ட பரிவர்த்தனைகள் ஒரு பில்லியன் என்ற மைல்கல்லை அடைந்திருக்கின்றது.

  • சமீபத்தில் யுபிஐ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகம் (UPI - Unified Payments Interface) ஆனது 100 மில்லியன் பயனாளிகள் என்ற முத்திரையை கடந்து, உலகின் எந்தவொரு பண வழங்கீட்டு அமைப்பிலும் அதனை நடைமுறையில் துரிதமான ஏற்றுக் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றியிருக்கின்றது.
  • யுபிஐ அமைப்பை இயக்கும் இந்திய தேசிய பணவழங்கீட்டுக் கழகம் சிங்கப்பூரிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் யுபிஐ அமைப்பை ஏற்றுக் கொள்ளச் செய்வதன் மூலம் அந்த அமைப்பை உலகளாவிய அளவிற்கு எடுத்துச் செல்ல முனைகின்றது.
  • அக்கழகம் யுபிஐ அமைப்பை 2016ம் ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெளியிட்டது.
  • யுபிஐ ஆனது பயனாளிகளை தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பிறிதோர் வங்கிக் கணக்கிற்கு ஒரு துரித பதிலளிப்புக் குறியீடைத் தரவேற்றியோ அல்லது மின்னணு முகவரி போன்ற தகவலைப் பயன்படுத்தியோ வங்கிக் கணக்குகளை எதையும் அளிக்காமல் பணம் அனுப்பிட இயலச் செய்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்