பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) 10வது ஆசிய யானை நிபுணர்கள் குழுவின் (Asian Elephant Specialist Group - AsESG) சந்திப்பானது மலேசியாவின் கோட்டா கினாபாலுவில் நடைபெற்றது.
இக்குழுவில் உள்ள நிபுணர்கள் ஆசிய யானைகளால் எதிர்கொள்ளப் படும் அச்சுறுத்தல்கள் & சவால்கள் மற்றும் பொருத்தமான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
இது ஆசிய யானைகளின் (எலிபஸ் மாக்சிமஸ்) ஆய்வு, கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ நிபுணர்களின் உலகளாவிய அமைப்பாகும். ஆசிய யானைகள் தற்பொழுது 13 நாடுகளில் உள்ளன.
கஜா என்பது ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் ASESGன் ஒரு இதழாகும்.