TNPSC Thervupettagam

10வது உலகத் தமிழ் மாநாடு

July 8 , 2019 1969 days 870 0
  • 10-வது உலகத் தமிழ் மாநாடானது சிகாகோவில் ஜூலை 04 முதல் 08 வரை நடத்தப்பட்டது.
  • இதன் 9-வது பதிப்பானது மலேசியாவின் கோலாம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியை சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமானது ஏற்பாடு செய்திருந்தது.
  • இந்நிகழ்வானது முதன்முறையாக இந்த ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
  • வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பானது “கீழடி - நம் தாய் மடி” (கீழடி அகழ்வாராய்ச்சி - நம் தமிழ்த்தாயின் மடி) எனும் கருத்துருவில் கவனம் செலுத்த இருக்கின்றது. மேலும் இதனை அச்சங்கம் மறைந்த தமிழறிஞர் ஜி.யு போப்பின் 200 ஆம் பிறந்த நாளில் அவருக்குச் சமர்ப்பிக்க உள்ளது.
  • பழமையில் புதிய வரலாற்றியியல் முறை, அறிவியல் பூர்வமான மற்றும் ஒப்பீட்டு ஆய்வு, தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், நாகரீகம், நவீன இலக்கியம் மற்றும் தமிழ்க் கணினி முறை ஆகியவை இம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்துருக்களாகும்.
  • இந்தக் கருத்துருவானது கீழ்க்காணும் 8 ஆய்வுகளின் அடிப்படையிலானது
    • பாரம்பரியமான தமிழ் இலக்கியம் (சங்க இலக்கியம்)
    • பண்டையத் தமிழ் நாகரீகம்,
    • தொல்காப்பியம்,
    • திருக்குறள்,
    • தமிழ் அறிஞர்களின் பங்களிப்புகள்,
    • தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்,
    • நவீன தமிழ் இலக்கியம் மற்றும்,
    • தமிழ் மொழி மற்றும் மொழியியல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்