TNPSC Thervupettagam

10 தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்

October 15 , 2019 1924 days 781 0
  • தேர்தல் ஆணையமானது தமிழகத்தில் 10 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை வாக்காளர் பட்டியலை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
  • ஒவ்வொரு பார்வையாளரும் சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அதிகாரிகளாக செயல்படுவார்கள். மேலும் அங்குள்ள வாக்காளர் பட்டியலின் சரிபார்ப்பு செயல்முறையை அவர்கள் மேற்பார்வையிடுவார்கள்.
  • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5.99 கோடி வாக்காளர்களில், 1.64 கோடி வாக்காளர்கள் மட்டுமே தங்கள் விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துள்ளனர்.
  • வாக்காளர்கள் கைபேசி செயலியின் மூலம் நிகழ்நேரத்தில், தாலுகா அலுவலகங்கள், மின்னணுத் தகவல் சேவை மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் தங்கள் விவரங்களைச் சரி பார்க்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்