TNPSC Thervupettagam

10-வது பாதுகாப்புக் கண்காட்சி

April 21 , 2018 2283 days 670 0
  • தரைப்பகுதி, கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு மீதான இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்புக் கண்காட்சியின் 10-வது பதிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருவிடந்தையில் நிறைவடைந்தது.
  • நான்கு நாள் நிகழ்ச்சியான (ஏப்ரல் 11 -14) இக்கண்காட்சியானது முறைப்படி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இக்கண்காட்சியில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்திய கப்பற்படை கப்பல்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை துறைமுகத்தில் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
  • அவைகளாவன
  1. சகயதாரி - எதிரியின் கண்ணில்படா போர்க்கப்பல்
  2. கமோர்டா - நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பாதுகாப்புக் கப்பல் (Anti-Submarine warfare corvette).
  3. சுமித்ரா – மேம்படுத்தப்பட்ட கடலோரக் காவல்படைக் கப்பல்
  4. ஐராவத் – நீர் நிலக் கப்பல் ( Amphibious ship)
  5. கிர்ச் – ஏவுகணைக் கப்பல்.
  • நான்கு நாட்கள் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சி “இந்தியா : வளரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்” என்ற கருத்துருவை அடிக்கோடிட்டுக் காண்பித்ததோடு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் இந்தியாவின் திறமையைக் காட்சிப்படுத்தியது.
  • கண்காட்சியில் இடம் பெற்ற 155 மி.மீ மேம்படுத்தப்பட்ட பீரங்கிகளுடன் நிலத்தில் இயங்கும் கருவிகளும் இக்கண்காட்சியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று இருந்தன.
  • இந்த பீரங்கியானது (Advanced Towed Artillery Gun-ATAG) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் கல்யாணி குழுமம், டாடா பவர் மற்றும் பீரங்கித் தொழிற்சாலை (OFB) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து தயாரிக்கப்பட்டது.
  • இந்தியா சொந்த பீரங்கியைக் கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்