TNPSC Thervupettagam

10:10:10 - டெல்லி டெங்குப் பிரச்சாரம்

September 5 , 2019 1782 days 583 0
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தில்லி அரசு “டெங்கு மற்றும் சிக்குன்குனியா” ஆகியவற்றிற்கு எதிராக 10 வார கால அளவுள்ள மிகப் பெரிய கொசு எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் கொசுக்களின் பரவலைத் தடுப்பதில் குடியிருப்பாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த  முன்னெடுப்பானது ‘10 ஹப்தே, 10 பாஜே, 10 நிமிடம் - ஹர் ரவிவர், டெங்கு பார் வார் ’என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெங்குக் கொசுக்களை ஒழிப்பதற்காக தில்லி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு 10 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் தேங்கி இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.
  • டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே உற்பத்தியாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்