கி.பி 10 ஆம் நூற்றாண்டு கடம்பர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும், கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஆனது தெற்கு கோவாவில் உள்ள ககோடாவில் உள்ள மகாதேவா கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது அதே காலகட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஜெயசிம்மனின் தலங்ரே கல்வெட்டின் இலக்கிய பாணியில் உள்ளது.
கோவாவின் கடம்பர்கள் கல்யாணா சாளுக்கியர்களின் துணைப் பிரிவினர் ஆவர்.
சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் தைலப்பா, இராஷ்டிரகூடர்களை வீழ்த்துவதில் உதவியதற்காக கடம்ப சாஸ்ததேவரை கோவாவின் மகாமண்டலேஸ்வரராக நியமித்தார்.
கடம்ப சாஸ்ததேவர் கி.பி. 960 ஆம் ஆண்டில் சந்தவாரா நகரத்தை சிலஹாரர்களிடமிருந்து கைப்பற்றினார்.