TNPSC Thervupettagam

10 ஆம் நூற்றாண்டு கடம்பர் கால கல்வெட்டு

January 8 , 2024 192 days 248 0
  • கி.பி 10 ஆம் நூற்றாண்டு கடம்பர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும், கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஆனது தெற்கு கோவாவில் உள்ள ககோடாவில் உள்ள மகாதேவா கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இது அதே காலகட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஜெயசிம்மனின் தலங்ரே கல்வெட்டின் இலக்கிய பாணியில் உள்ளது.
  • கோவாவின் கடம்பர்கள் கல்யாணா சாளுக்கியர்களின் துணைப் பிரிவினர் ஆவர்.
  • சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் தைலப்பா, இராஷ்டிரகூடர்களை வீழ்த்துவதில் உதவியதற்காக கடம்ப சாஸ்ததேவரை கோவாவின் மகாமண்டலேஸ்வரராக நியமித்தார்.
  • கடம்ப சாஸ்ததேவர் கி.பி. 960 ஆம் ஆண்டில் சந்தவாரா நகரத்தை சிலஹாரர்களிடமிருந்து கைப்பற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்