TNPSC Thervupettagam

10 ஆம் நூற்றாண்டு சோழர் கால வணிகர் சங்கக் கல்வெட்டு

January 3 , 2025 3 days 109 0
  • இந்தியத் தொல்லியல் துறையானது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் தாலுக்காவில் உள்ள பிலிப்பட்டி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால வணிகர் சங்கக் கல்வெட்டினைப் பொருள் கண்டுணர்ந்துள்ளது.
  • மங்கல நாடு, புறமலை நாடு, பூங்குன்றம் நாடு, மணலூர் நாடு மற்றும் கொடும்பாளூர் வீரப்பட்டினம் ஆகியவற்றின் ஐநூற்றுவர்கள் உட்பட பல்வேறு பிராந்திய பிரிவுகளின் வணிகக் குழுக்களை இது குறிப்பிடுகிறது.
  • 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு ஆனது பராந்தக சோழன் அல்லது உத்தம சோழன் ஆட்சியின் போது நிறுவப்பட்டிருக்கலாம்.
  • இந்தக் கல்வெட்டில் அங்குசம் (அக்காலங்களில் யானைகளை கட்டுப்படுத்த வேண்டி பயன்படுத்தப் பட்ட கூர்மையான ஒரு கூரான கொக்கி), திரிசூலம் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்