TNPSC Thervupettagam

10 இராணுவக் குடியிருப்புகள் (கண்டோன்மென்ட்) நிலை நீக்கம்

March 11 , 2024 131 days 294 0
  • நாட்டில் உள்ள மொத்தம் 58 இராணுவக் குடியிருப்பு பகுதிகளில் 10 இல் உள்ள குடிமைப் பகுதிகளை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பகுதிகள் தற்போது அந்தந்த மாநில நகராட்சிகளுடன் (உள்ளாட்சி அமைப்புகள்) இணைக்கப்படும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் ஆறு பகுதிகள் உட்பட, பிற இராணுவக் குடியிருப்புகளில் உள்ள குடிமைப் பகுதிகளை அப்பட்டியலில் இருந்து அகற்றுவதற்கான செயல்முறை நடைபெற்று வருகிறது.
  • இந்த 10 இராணுவக் குடியிருப்புகளில்;
    • உத்தரக்காண்டில் உள்ள டேராடூன் மற்றும் கிளமென்ட் நகர இராணுவக் குடியிருப்புகள்;
    • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபதேகர், பாபினா, ஷாஜஹான்பூர் மற்றும் மதுரா இராணுவக் குடியிருப்புகள்;
    • மகாராஷ்டிராவில் உள்ள தியோலாலி இராணுவக் குடியிருப்பு;
    • ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் இராணுவக் குடியிருப்பு;
    • ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மற்றும் நசிராபாத் இராணுவக் குடியிருப்புகள்.
  • இராணுவக் குடியிருப்புகள் என்பது பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் வசிக்கும் இடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • 1924 ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்புகள் சட்டத்தின் (தற்போது 2006 ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்புகள் சட்டம்) கீழ் இராணுவக் குடியிருப்புகள் அறிவிக்கப் படுகின்றன.
  • மத்திய அரசானது, மாநில அரசுகள் மற்றும் இராணுவக் குடியிருப்பு வாரியங்களைக் கலந்தாலோசித்த பிறகு, குறிப்பிட்ட சில பகுதிகளை விலக்கி, அந்தப் பகுதிகளை மாநில உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க அறிவிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்