10 இராணுவக் குடியிருப்புகள் (கண்டோன்மென்ட்) நிலை நீக்கம்
March 11 , 2024 262 days 361 0
நாட்டில் உள்ள மொத்தம் 58 இராணுவக் குடியிருப்பு பகுதிகளில் 10 இல் உள்ள குடிமைப் பகுதிகளை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதிகள் தற்போது அந்தந்த மாநில நகராட்சிகளுடன் (உள்ளாட்சி அமைப்புகள்) இணைக்கப்படும்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஆறு பகுதிகள் உட்பட, பிற இராணுவக் குடியிருப்புகளில் உள்ள குடிமைப் பகுதிகளை அப்பட்டியலில் இருந்து அகற்றுவதற்கான செயல்முறை நடைபெற்று வருகிறது.
இந்த 10 இராணுவக் குடியிருப்புகளில்;
உத்தரக்காண்டில் உள்ள டேராடூன் மற்றும் கிளமென்ட் நகர இராணுவக் குடியிருப்புகள்;
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபதேகர், பாபினா, ஷாஜஹான்பூர் மற்றும் மதுரா இராணுவக் குடியிருப்புகள்;
மகாராஷ்டிராவில் உள்ள தியோலாலி இராணுவக் குடியிருப்பு;
ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் இராணுவக் குடியிருப்பு;
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மற்றும் நசிராபாத் இராணுவக் குடியிருப்புகள்.
இராணுவக் குடியிருப்புகள் என்பது பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் வசிக்கும் இடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
1924 ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்புகள் சட்டத்தின் (தற்போது 2006 ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்புகள் சட்டம்) கீழ் இராணுவக் குடியிருப்புகள் அறிவிக்கப் படுகின்றன.
மத்திய அரசானது, மாநில அரசுகள் மற்றும் இராணுவக் குடியிருப்பு வாரியங்களைக் கலந்தாலோசித்த பிறகு, குறிப்பிட்ட சில பகுதிகளை விலக்கி, அந்தப் பகுதிகளை மாநில உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க அறிவிக்கலாம்.