TNPSC Thervupettagam

10 பில்லியன் UPI பரிவர்த்தனைகள்

September 5 , 2023 318 days 231 0
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகப் (UPI) பரிவர்த்தனைகள் ஆனது வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகள் வரம்பினைத் தாண்டியுள்ளது.
  • ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேற் கொள்ளப் பட்ட மாதாந்திரப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 15.18 டிரில்லியன் ரூபாய் என்ற நிகரப் பரிவர்த்தனை மதிப்புடன் 10.24 பில்லியனைத் தாண்டியது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6.58 பில்லியன் எண்ணிக்கையில் மாதாந்திர பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு 50% அதிகமாகியுள்ளன.
  • ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக 1 பில்லியன் மாதாந்திரப் பரிவர்த்தனைகள் பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்