இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகப் (UPI) பரிவர்த்தனைகள் ஆனது வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகள் வரம்பினைத் தாண்டியுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேற் கொள்ளப் பட்ட மாதாந்திரப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 15.18 டிரில்லியன் ரூபாய் என்ற நிகரப் பரிவர்த்தனை மதிப்புடன் 10.24 பில்லியனைத் தாண்டியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6.58 பில்லியன் எண்ணிக்கையில் மாதாந்திர பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு 50% அதிகமாகியுள்ளன.
ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக 1 பில்லியன் மாதாந்திரப் பரிவர்த்தனைகள் பதிவானது.