10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு
August 31 , 2019
1916 days
787
- 10 பொதுத் துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட உள்ளன.
- கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
- யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
- பஞ்சாப் தேசிய வங்கி, ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் இந்திய யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
- இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
- 2017 ல் 27 பொதுத் துறை வங்கிகளுக்குப் பதிலாக, இப்போது 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும்.
- அறிவிக்கப்பட்ட இணைப்புகளில் மிகப் பெரியது ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவற்றுடன் பஞ்சாப் தேசிய வங்கியின் இணைப்பாகும்.
- இந்திய பாரத வங்கிக்குப் பிறகு, மேலே கூறப்பட்ட அந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக இருக்கும்.
Post Views:
787