தரைப்பகுதி, கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு மீதான இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்புக் கண்காட்சியின் 10-வது பதிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருவிடந்தையில் நிறைவடைந்தது.
நான்கு நாள் நிகழ்ச்சியான (ஏப்ரல் 11 -14) இக்கண்காட்சியானது முறைப்படி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்திய கப்பற்படை கப்பல்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை துறைமுகத்தில் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அவைகளாவன
சகயதாரி - எதிரியின் கண்ணில்படா போர்க்கப்பல்
கமோர்டா - நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பாதுகாப்புக் கப்பல் (Anti-Submarine warfare corvette).
சுமித்ரா – மேம்படுத்தப்பட்ட கடலோரக் காவல்படைக் கப்பல்
ஐராவத் – நீர் நிலக் கப்பல் ( Amphibious ship)
கிர்ச் – ஏவுகணைக் கப்பல்.
நான்கு நாட்கள் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சி “இந்தியா : வளரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்” என்ற கருத்துருவை அடிக்கோடிட்டுக் காண்பித்ததோடு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் இந்தியாவின் திறமையைக் காட்சிப்படுத்தியது.
கண்காட்சியில் இடம் பெற்ற 155 மி.மீ மேம்படுத்தப்பட்ட பீரங்கிகளுடன் நிலத்தில் இயங்கும் கருவிகளும் இக்கண்காட்சியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று இருந்தன.
இந்த பீரங்கியானது (Advanced Towed Artillery Gun-ATAG) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் கல்யாணி குழுமம், டாடா பவர் மற்றும் பீரங்கித் தொழிற்சாலை (OFB) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து தயாரிக்கப்பட்டது.
இந்தியா சொந்த பீரங்கியைக் கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.