சத்தீஸ்கரின் புதிய ராய்ப்பூரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனான (Integrated Command and Control Centre-ICCC) 10வது பொலிவுறு நகரத்தை பிரதம மந்திரி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
உயர்லட்சிய பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அகமதாபாத், வதோதரா, சூரத், புனே, நாக்பூர், ராஜ்கோட், விசாகப்பட்டினம், போபால் மற்றும் காக்கிநாடா ஆகிய ஒன்பது நகரங்களில் உள்ளன.
புதிய ராய்ப்பூர் என்பது சத்தீஸ்கரின் புதிய தலைநகரமும் நாட்டின் முதல் பொலிவுறு பசுமை நகரமும் ஆகும்.
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற இரு நகரங்கள் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் ஆகியனவாகும்.