TNPSC Thervupettagam

100 பில்லியன் டாலர் அளவினை எட்டிய இந்தியாவின் வருடாந்திர பண வரவு

April 27 , 2023 449 days 234 0
  • வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் வருடாந்திர பண வரவானது 100 பில்லியன் டாலர்கள் அளவினைக் கடந்த, உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
  • உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில்  அனுப்பப்படும் பணம் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களால் அனுப்பப்படும் பண வரவானது 2022 ஆம் ஆண்டில், ஆண்டிற்கு 12% என்ற வளர்ச்சியுடன் ஒரு உய்ய நிலையைக் கடந்தது.
  • 2021 ஆம் நிதியாண்டில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 2023 ஆம் நிதி ஆண்டிலும் பண வரவினை அதிகம் பெறும் நாடு என்ற அந்தஸ்தினைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
  • குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப் படும் பண மதிப்பானது ஆண்டிற்கு 5% அதிகரிப்புடன், 2022 ஆம் ஆண்டில் 630 பில்லியன் டாலர்களை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்