HDFC வங்கி, மாஸ்டர்கார்டு, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதியியல் கழகம் மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை ஆகியவை இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக வேண்டி 100 மில்லியன் டாலர் கடன் வசதியை வழங்கியுள்ளன.
இந்தக் கடன் வசதியானது சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமையின் உலகப் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு நிதி முன்னெடுப்பு மற்றும் இந்தியாவில் அதனுடைய கோவிட் – 19 நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும்.