TNPSC Thervupettagam
February 19 , 2018 2470 days 823 0
  • நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே 100 புதிய கிரகங்கள் உள்ளன என்பதை உறுதி செய்துள்ளனர்.
  • இதன் மூலம், நாசாவின் K2 விண்வெளித் திட்டத்தின் வழியாக கண்டறியப்பட்டுள்ள வெளிக்கோள்களின் மொத்த எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
  • சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு சுற்றி வரும் கோள்களே வெளிக்கோள்கள் எனப்படும்.
  • மேலும் இந்த ஆய்வில் HD 212657 எனும் வெளிக்கோள் ஒன்று கெப்ளர் விண்வெளிக் கலனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • HD 212657 மிகவும் பிரகாசமான நட்சத்திரமாகும்.
  • வெளிக்கோள்களை கண்டுபிடிப்பதற்காக 2009ஆம் ஆண்டு கெப்ளர் விண்வெளி ஆய்வுக்கலம் அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்