நிறுவப்பட்ட சூரிய மின்னாற்றல் திறனில் 100 GW (100.33 GW) என்ற ஒரு வரம்பினைத் தாண்டி இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய மின்னாற்றல் துறையின் திறன் என்பது மிக அசாதாரணமாக 3450% அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 2.82 GW ஆக இருந்த இது 2025 ஆம் ஆண்டில் 100 GW ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் சூரிய மின்னாற்றல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற நிலையில் இது நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனில் 47% ஆகும்.
2024 ஆம் ஆண்டில், சாதனை அளவிலான 24.5 GW சூரிய மின்னாற்றல் திறன் உற்பத்தி செய்யப் பட்டது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டில் பதிவான உற்பத்தித் திறனுடன் ஒப்பிடும் போது சூரிய மின்னாற்றல் நிறுவல்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
கடந்த ஆண்டு 18.5 GW பயன்பாட்டு அளவிலான சூரிய மின்னாற்றல் உற்பத்தி திறன் நிறுவப் பட்டது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 2.8 மடங்கு அதிகரிப்பு ஆகும்.
இராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை மின்னாற்றல் உற்பத்தித் திறனில் சிறப்பான செயல்திறன் கொண்ட சில மாநிலங்களில் அடங்கும்.
இந்தியாவில் மேற்கூரை சார்ந்த சூரிய மின்னாற்றல் துறையில், 2024 ஆம் ஆண்டில் 4.59 GW புதிய உற்பத்தி திறன் நிறுவப் பட்டதுடன் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பதிவானது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டு பதிவான அளவுடன் ஒப்பிடும்போது 53% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.