இந்த கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உயர் திறன் கொண்ட 10 அரசுப் பல்கலைக் கழகங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த பல்கலைக் கழகங்கள் மத்திய அரசின் ராஷ்ட்ரிய உச்சதார் சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் சிறப்புத் தகுதிகளை மேம்படுத்திட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.
பெருமைமிகு கார்னெல், யுபென் மற்றும் யுசி பெர்கீகிலே உள்பட 7 அமெரிக்கப் பல்கலைக் கழகங்களினால் பல்வேறுபட்ட துறைகளில் அவை வழிகாட்டப்பட இருக்கின்றன.
இந்தப் பல்கலைக் கழகங்கள் நிறுவனச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக நிதிகளைப் பெற்றிட சிறப்பு வளாக நிறுவனங்களை ஏற்படுத்த இருக்கின்றன.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள நிலையானது மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக 100 கோடிகள் கட்டாயம் செலவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகம், சாவித்திரிபாய் புலே பல்கலைக் கழகம் ஆகியன ஏற்கெனவே தங்களது நிறுவனங்களைக் கொண்டிருக்கின்றன.