உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சங்கமானது (FSSAI), கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களில் 100 சதவீத பழச்சாறுகள் உள்ளது எனக் குறிப்பிட வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இந்த அனைத்துப் பழச்சாறுகளிலும் அதிக அளவு தண்ணீரே உள்ளது.
சிறிதளவு பழச்சாறு அல்லது பழக்கூழ் சேர்ப்பதால் அவை 100 சதவீதம் பழச்சாறு கொண்டதாக ஆகாது.
மேலும் இந்த பழச்சாறுகளில் ஒரு கிலோவுக்கு 15 கிராமிற்கு மேல் சர்க்கரை அளவு இருந்தால், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இனிப்பு சாறு என்றே பெயரிட வேண்டும்.