இந்தியாவின் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பு நிறுவனமானது (Tribal Cooperative Marketing Development Federation of India-TRIFED)100 புதிய வன கரிமப் பொருட்களை வெளியிட்டுள்ளது.
அந்தப் பொருட்கள் பின்வருமாறு:
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரிலிருந்து தங்க மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள்.
உத்தரகாண்டில் முன்ஞ் தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகின்ற கூடைகள் மற்றும் பெட்டிகள்.
நீலகிரிப் பழங்குடியினரிடமிருந்து கிராம்பு, விதை கொண்ட புளி, காபித் தூள், யூகலிப்டஸ் எண்ணெய்.
ராஜஸ்தானின் மீனா பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட முகக் கவசங்கள்.
மத்தியப் பிரதேசத்தின் புல் மற்றும் கோண்டு பழங்குடியினரால் உருவாக்கப் பட்ட காதா மற்றும் சரண் போன்ற நோய்த் தடுப்பு ஊக்கிகள்.
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து உருவாக்கப்பட்ட பருப்பு வகைகள், ஜாமுன் தூள் மற்றும் கிலோய் தூள்.
வட கிழக்கு மாநிலங்களிலிருந்து ஊறுகாய், சிவப்பு அரிசி, பெல் சாறுகள் ஆகியன.