தேசிய சுகாதார ஆணையம் (NHA) ஆனது ஆயுஷ்மான் பாரத் எண்ணிம திட்டத்தின் (ABDM) கீழ் 100 சிறு மருத்துவத் தளங்கள் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்த சிறு மருத்துவத் தளங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், 10 படுக்கைகளுக்கு குறைவான எண்ணிக்கை கொண்ட மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற சுகாதார வசதிகளைக் கொண்ட தொகுப்பாக செயல்பட உள்ளது.
இவை ஆயுஷ்மான் பாரத் எண்ணிமத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு எண்ணிம சுகாதாரச் சேவைகளை வழங்குகின்றன.