TNPSC Thervupettagam

100 முன்னணி ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ சேவை நிறுவனங்கள், 2023

December 13 , 2024 9 days 44 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆனது, அதன் 2024 ஆம் ஆண்டு அறிக்கையில், உலகளாவிய ஆயுத வருவாய் ஆனது 2023 ஆம் ஆண்டில் சுமார் 632 பில்லியன் டாலர்களை எட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது.
  • இது முந்தைய ஆண்டை விட 4.2% அதிகமாகும்.
  • இவற்றில், அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 317 பில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்தத்தில் பாதியளவுப் பங்கினைக் கொண்டுள்ளன.
  • லாக்ஹீட் மார்டின், RTX , நார்த்ரோப் குருமன், போயிங் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களாகும்.
  • முதல் 100 இடங்களில் உள்ள மூன்று இந்திய நிறுவனங்களின் வருவாய் என்பது சுமார் 5.8% அதிகரித்து 6.7 பில்லியன் டாலர் ஆக பதிவாகியுள்ளன.
  • இந்தியாவின் மிகப்பெரியதொரு ஆயுத உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் ஆயுத உற்பத்தி வருவாய் 6.9% அதிகரித்து 3.7 பில்லியன் டாலராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்