TNPSC Thervupettagam

100 முன்னணிப் பாதுகாப்பு நிறுவனங்களின் பட்டியல்

December 14 , 2022 710 days 395 0
  • சுவீடனைச் சேர்ந்த சிந்தனைச் செயல்பாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI) 2021 ஆம் ஆண்டின் 100 முன்னணிப் பாதுகாப்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.
  • இது 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 5.1 பில்லியன் டாலர் மதிப்பில், ஆயுதங்களை விநியோகிப்பதற்கான உலகின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் HAL (42வது) மற்றும் BEL (63வது) ஆகிய நிறுவனங்களை சேர்த்துள்ளது.
  • SIPRI நிறுவனமானது முதன்முறையாக முதல் 100 இடங்களில் ஒரு தைவான் நிறுவனத்தைச் சேர்த்துள்ளது.
  • சீன நாட்டினைச் சேர்ந்த மொத்தம் எட்டு நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் பட்டியலிடப் பட்டுள்ள நிலையில், அவற்றில் நான்கு நிறுவனங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
  • இந்த எட்டு சீன நிறுவனங்களின் ஆயுத விற்பனையானது 2021 ஆம் ஆண்டில் 109 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • மொத்த ஆயுத விற்பனையில் 51 சதவீதப் பங்கைக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக முன்னணியில் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்க நிறுவனங்களைத் தொடர்ந்து சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்