சுவீடனைச் சேர்ந்த சிந்தனைச் செயல்பாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI) 2021 ஆம் ஆண்டின் 100 முன்னணிப் பாதுகாப்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.
இது 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 5.1 பில்லியன் டாலர் மதிப்பில், ஆயுதங்களை விநியோகிப்பதற்கான உலகின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் HAL (42வது) மற்றும் BEL (63வது) ஆகிய நிறுவனங்களை சேர்த்துள்ளது.
SIPRI நிறுவனமானது முதன்முறையாக முதல் 100 இடங்களில் ஒரு தைவான் நிறுவனத்தைச் சேர்த்துள்ளது.
சீன நாட்டினைச் சேர்ந்த மொத்தம் எட்டு நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் பட்டியலிடப் பட்டுள்ள நிலையில், அவற்றில் நான்கு நிறுவனங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
இந்த எட்டு சீன நிறுவனங்களின் ஆயுத விற்பனையானது 2021 ஆம் ஆண்டில் 109 பில்லியன் டாலர்களை எட்டியது.
மொத்த ஆயுத விற்பனையில் 51 சதவீதப் பங்கைக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக முன்னணியில் உள்ளன.
இந்தப் பட்டியலில் அமெரிக்க நிறுவனங்களைத் தொடர்ந்து சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.