உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் காசநோயின் 32,500 மரபணு மாதிரிகளின் இலக்கில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 10,000 மாதிரிகளின் மரபணு வரிசையாக்க செயல்முறையை நிறைவு செய்து உள்ளது.
இது மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட காசநோய் பற்றிய பெரும் புரிதலை மிக நன்கு மேம்படுத்துவதையும், இந்தியாவில் காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் பெரும் தனித்துவமான மரபணு அம்சங்களைப் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
வரிசையாக்கப்பட்ட மாதிரிகளில், 7% ஆனது ஒற்றை மருந்திற்கான எதிர்ப்புத் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மரபணு வரிசையாக்க முன்னெடுப்பு ஆனது, 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “Dare2eraD TB” எனப்படும் ஒரு முதன்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கு சுமார் 1,990 பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்ற நிலையில் இது 2015 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கு சுமார் 2,370 ஆக இருந்தது.
உலகளவில் பதிவான புதிய காசநோய்ப் பாதிப்புகளில் இந்தியாவின் பங்கு சுமார் 28% ஆகும்.