- மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் 105-வது இந்திய அறிவியல் மாநாட்டினை (Indian Science Congress - ISC) தொடங்கி வைத்துள்ளார்.
- 5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் கருத்துரு “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் சென்றடையாததைச் சென்றடைதல்”. (Reaching the Unreached Through Science & Technology)
- இந்தியாவின் முன்னணி அறிவியல் அமைப்பான இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தால் (ISCA – Indian Science Congress Association) இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
- வடகிழக்குப் பிராந்தியத்தில் இரண்டாவது முறையாக தேசிய அறிவியல் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் 2009 ஆம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இம்மாநாடு நடத்தப்பட்டது.
இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம்
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாட்டை நடத்துகின்றது.
- 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆசிய சங்கத்தில் (Asiatic Society) இந்திய தேசிய மாநாட்டின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.