10-வது உலகத் தமிழ் மாநாடானது சிகாகோவில் ஜூலை 04 முதல் 08 வரை நடத்தப்பட்டது.
இதன் 9-வது பதிப்பானது மலேசியாவின் கோலாம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமானது ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வானது முதன்முறையாக இந்த ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பானது “கீழடி - நம் தாய் மடி” (கீழடி அகழ்வாராய்ச்சி - நம் தமிழ்த்தாயின் மடி) எனும் கருத்துருவில் கவனம் செலுத்த இருக்கின்றது. மேலும் இதனை அச்சங்கம் மறைந்த தமிழறிஞர் ஜி.யு போப்பின் 200 ஆம் பிறந்த நாளில் அவருக்குச் சமர்ப்பிக்க உள்ளது.
பழமையில் புதிய வரலாற்றியியல் முறை, அறிவியல் பூர்வமான மற்றும் ஒப்பீட்டு ஆய்வு, தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், நாகரீகம், நவீன இலக்கியம் மற்றும் தமிழ்க் கணினி முறை ஆகியவை இம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்துருக்களாகும்.
இந்தக் கருத்துருவானது கீழ்க்காணும் 8 ஆய்வுகளின் அடிப்படையிலானது